1.-----------------------------------------
Anderson
பூனா ஒப்பந்தம் 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் , 24
March 18, 2017
பூனா ஒப்பந்தம் என்பது 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் , 24 அன்று பூனாவில் உள்ள எரவாடா சிறையில் அம்பேத்கருக்கும் காந்தி அடிகளுக்கும் இடையே ஏற்பட்ட ஓர் உடன்படிக்கை ஆகும்.
வரலாறு
தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தேர்தலில் தனித் தொகுதிகளை அளிக்க பிரிட்டிசு அரசு முன் வந்தபோது இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்ட அம்பேத்கர் அந்தத் திட்டத்தை ஆதரித்தார். ஆனால் காந்தி அதைக் கடுமையாக எதிர்த்தார். இந்துக்கள் தீண்டத் தகாதவர்கள் என்றும் சாதி இந்துக்கள் என்றும் பிளவு படுவதைத் தாம் விரும்பவில்லை என்று கூறினார். எரவாடா சிறையில் இருந்த காந்தி அடிகள் 18-9-1932 இல் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார். காந்தியடிகள் உடல் நிலை மோசமானதால் அந்த உண்ணாவிரதத்தை நிறுத்திக் காந்தியின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தில் அம்பேத்கரும் பிற இந்து தலைவர்களும் பூனாவில் கூடிப் பேசினர். இந்தியாவின் மிகச் சிறந்த தலைவராக விளங்கிய காந்தி அடிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கடமை ஒரு புறம்; தீண்டப் படாத சமூகத்தின் நலனைக் காக்க வேண்டிய பொறுப்பு மறுபுறம். எனவே இருதலைக் கொள்ளி நிலைமைக்கு அம்பேத்கர் ஆளானார்.
பூனா ஒப்பந்தத்தின் படி மாகாணச் சட்டசவைகளில் 148 இடங்களைத் தீண்டத் தகாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிப்பது என்று முடிவு ஆனது. பிரிட்டிசு இந்தியாவில் மத்தியச் சட்ட சவையில் இந்துக்களுக்காக உள்ள மொத்த இடங்களில் பத்து விழுக்காட்டைத் தீண்டத் தகாதவர்களுக்கு ஒதுக்கீடு செய்வது என்றும் தீர்மானித்தார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக அம்பேத்கரும், சாதி இந்துக்களின் சார்பாகப் பண்டித மதன் மோகன் மாளவியாவும் கையெழுத்து இட்டார்கள். இராசகோபாலாச்சாரி இராசேந்திரப் பிரசாது, எம்.சி.இராஜா போன்ற தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர். இதனைத் தொடர்ந்து காந்தி உண்ணா நோன்பு போராட்டத்தைக் கைவிட்டார்.
Anderson
பூனா ஒப்பந்தம் 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் , 24
March 18, 2017
பூனா ஒப்பந்தம் என்பது 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் , 24 அன்று பூனாவில் உள்ள எரவாடா சிறையில் அம்பேத்கருக்கும் காந்தி அடிகளுக்கும் இடையே ஏற்பட்ட ஓர் உடன்படிக்கை ஆகும்.
வரலாறு
தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தேர்தலில் தனித் தொகுதிகளை அளிக்க பிரிட்டிசு அரசு முன் வந்தபோது இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்ட அம்பேத்கர் அந்தத் திட்டத்தை ஆதரித்தார். ஆனால் காந்தி அதைக் கடுமையாக எதிர்த்தார். இந்துக்கள் தீண்டத் தகாதவர்கள் என்றும் சாதி இந்துக்கள் என்றும் பிளவு படுவதைத் தாம் விரும்பவில்லை என்று கூறினார். எரவாடா சிறையில் இருந்த காந்தி அடிகள் 18-9-1932 இல் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார். காந்தியடிகள் உடல் நிலை மோசமானதால் அந்த உண்ணாவிரதத்தை நிறுத்திக் காந்தியின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தில் அம்பேத்கரும் பிற இந்து தலைவர்களும் பூனாவில் கூடிப் பேசினர். இந்தியாவின் மிகச் சிறந்த தலைவராக விளங்கிய காந்தி அடிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கடமை ஒரு புறம்; தீண்டப் படாத சமூகத்தின் நலனைக் காக்க வேண்டிய பொறுப்பு மறுபுறம். எனவே இருதலைக் கொள்ளி நிலைமைக்கு அம்பேத்கர் ஆளானார்.
பூனா ஒப்பந்தத்தின் படி மாகாணச் சட்டசவைகளில் 148 இடங்களைத் தீண்டத் தகாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிப்பது என்று முடிவு ஆனது. பிரிட்டிசு இந்தியாவில் மத்தியச் சட்ட சவையில் இந்துக்களுக்காக உள்ள மொத்த இடங்களில் பத்து விழுக்காட்டைத் தீண்டத் தகாதவர்களுக்கு ஒதுக்கீடு செய்வது என்றும் தீர்மானித்தார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக அம்பேத்கரும், சாதி இந்துக்களின் சார்பாகப் பண்டித மதன் மோகன் மாளவியாவும் கையெழுத்து இட்டார்கள். இராசகோபாலாச்சாரி இராசேந்திரப் பிரசாது, எம்.சி.இராஜா போன்ற தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர். இதனைத் தொடர்ந்து காந்தி உண்ணா நோன்பு போராட்டத்தைக் கைவிட்டார்.
2------------------------------
எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு பிரிவு: நவம்பர்2011 வெளியிடப்பட்டது: 03 பிப்ரவரி 2012
தீண்டத்தகாத மக்களை அரசியல் அரங்கிற்கு கொண்டு வருவதில் அம்பேத்கரின் பங்களிப்பு– 15
தலித் அம்பேத்கர் காந்தி இராஜாஜி
ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் சார்பாக டாக்டர் அம்பேத்கர் பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்; சாதி இந்துக்கள் சார்பாக மதன்மோகன் மாளவியா கையொப்பமிட்டார். ஒப்பந்தம் கையெழுத் தாகும் முன்பு, ராவ் பகதூர் ராஜாவும் அவரைப் பின்பற்றுபவர்களும் கையெழுத்திடுவதை தாங்கள் அனுமதிக்க முடியாது என்று மதராசிலிருந்து வந்திருந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். மேலும், அவர் அவ்வாறு கையெழுத்திட அனுமதிக்கப்பட்டால், டாக்டர் அம்பேத்கரும் அவரைப் பின்பற்றுபவர்களும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட மாட்டார்கள் என்றும் கூறினர். இந்த நிபந்தனைகளை ஏற்று டாக்டர் அம்பேத்கரும் அவரைப் பின்பற்று பவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதையடுத்து திரு. ராஜா மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களின் கையொப்பங்களைப் பெற ஏற்பாடு செய்யும்படி டாக்டர் அம்பேத்கர் கேட்டுக் கொண்டார்.
AL145_370நீண்ட விவாதத்திற்குப் பிறகு அவர்களை தனிப்பட்ட முறையில் அந்த ஆவணத்தின் இறுதிப் பகுதியில் கையெழுத்திட அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அவ்வாறே அவர்கள் கையெழுத்திட்டனர். ஆனால், ஒரு பெரிய வியப்பு என்னவெனில், ஆவணத்தின் இறுதியில் ராஜா கையெழுத்திட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் ஜெயகர் மற்றும் சப்ரூ ஆகியோரின் கையொப்பங்களுக்கிடையே அவர் தமது கையொப் பத்தை செருகி இட்டார்.
“பூனா ஒப்பந்தத்தில், 24.9.1932 அன்று கையொப்ப மிட்டவர்கள் : 1. மதன்மோகன் மாளவியா 2. தேஜ் பகதூர் சப்ரு 3. எம்.ஆர். ஜெயகர், 4. பி.ஆர். அம்பேத்கர் 5. சிறீநிவாசன் 6. எம்.சி. ராஜா 7. சி.வி. மேத்தா 8. சி. ராஜகோபாலாச்சாரி 9. ராஜேந்திர பிரசாத் 10. ஜி.டி. பிர்லா 11. ராமேஸ்வரதாஸ் பிர்லா 12. பி.எஸ். காமத் 13. ஜி.கே. தியோதர் 14. ஏ.வி. தாக்கர் 15. ஆர்.ஆர். பாகலே 16. பி.ஜி. சோலங்கி 17. பி. பாலு 18. கோவிந்த் மாளவியா 19. தேவதாஸ் காந்தி 20. பிஸ்வாஸ் 21. பி.என். ராஜ்போஜ் 22. ராவை .ஜி.ஏ 23. சங்கர்லால் பங்கர்
ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது, “மகிழ்ச்சி கரை புரண்டோட ராஜகோபாலாச்சாரி, தமது பேனாவை டாக்டர் அம்பேத்கருடன் பரிமாறிக் கொண்டார்.
பம்பாயில் செப்டம்பர் 25 அன்று நடைபெற்ற இந்த மாநாட்டின் கடைசிக் கூட்டத்தில் கீழ்க்கண்டவர்களின் கையொப்பங்களும் பெறப்பட்டன : 1. லல்லுபாய் சாமல்தாஸ் 2. ஹன்சாமேத்தா 3. கே. நடராஜன் 4. காமகோட்டி நடராஜன் 5. புருஷோத்தம்தாஸ் தாசர்தாஸ் 6. மதுரதாஸ்வாசன்ஜி 7. வால்சந்த் ஹீராச்சந்த் 8. கே.என். குன்ஸ்ரு 9. கே.ஜி. லிமாயி 10. பி. கோதண்டராவ் 11. என்.வி. காட்கில் 12. மனுசுபேதார் 13. அவந்தராபாய் கோகலே 14. கே.ஜே. சிட்டாலியா 15. ராதாசாந்த் மாளவியா 16. ஏ.ஆர். பாட் 17. கோலம் 18. பிரதான்.
ஒப்பந்தத்தின் வாசகம் உடனடியாக பிரிட்டிஷ் அமைச்சரவைக்கும், வைசிராய்க்கும் ஒவ்வொரு கட்சியாலும் தனித்தனியாக தந்தி மூலம் அனுப்பப்பட்டது. மேலும், ஒவ்வொரு கட்சியினரும் ஒப்பந்த நகலை தனித்தனியே அளித்தனர். பம்பாய் ஆளுநரின் செயலாளருக்கும் அளிக்கப்பட்டது. அடுத்த நாள் காலை ஒப்பந்தத்தை உறுதி செய்ய பம்பாய்க்கு தலைவர்கள் திரும்பினர். பிற்பகல் 2 மணிக்கு இந்திய வணிகர் சங்க மண்டபத்தில் தலைவர்கள் ஒரு கூட்டத்தை நடத்தினர்.
பூனா ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த நடந்த இந்தக் கூட்டத்தைப் பற்றி "பம்பாய் கிரானிக்கில்' பின்வருமாறு செய்தி வெளியிட்டிருந்தது. பண்டிட் மதன்மோகன் மாளவியா கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தமது உரையில், பூனா ஒப்பந்தம் கையெழுத்தாக உதவிய எல்லோருக்கும் அவர் நன்றி கூறினார். டாக்டர் அம்பேத்கரின் உதவியில்லாமல் இந்த பூனா ஒப்பந்தம் உருப்பெற்றிருப்பது சிரமம் என்று கூறி அவருக்கு சிறப்பு நன்றி தெரிவித்தார். இப்பொழுது இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் முழுப் பொறுப்பும் இந்துக்களின் தோள்களின் மீது உள்ளது.
சர் தேஜ் பகதூர் சப்ரு மற்றும் ராஜகோபாலாச்சாரி ஆகியோர் நிகழ்ச்சியில் உரையாற்றினர். திரு. மதுரதாசும் விஸ்ஸோன்ஜி ஹிம்ஜியும் தீர்மானத்தை முன்மொழிந்தனர். திரு. மதுரதாஸ் விஸ்ஸோன்ஜி, பூனா ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் தீர்மானத்தை முன்மொழிந்தார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:
“சாதி இந்து தலைவர்களுக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் தலைவர்களுக்கும் இடையே 1932 செப்டம்பர் 24 அன்று ஏற்பட்ட பூனா ஒப்பந்தத்தை இம்மாநாடு உறுதிப்படுத்துகிறது. மேலும், இந்து சமூகத்திற்குள்ளேயே தனித் தேர்தல் தொகுதிகள் ஏற்படுத்திய பிரிட்டிஷ் அரசு அதன் முடிவைத் திரும்பப் பெறும் என்றும், பூனா ஒப்பந்தத்தை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளும் என்றும் இம்மாநாடு நம்புகிறது. மகாத்மா காந்தி தாம் விதித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தமது உண்ணா நோன்பை முடித்துக் கொள்வதற்கு உதவும் வகையில் காலம் கடப்பதற்கு முன் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அரசை மாநாடு வலியுறுத்துகிறது.
“இந்துக்களில் எவர் ஒருவரையும் அவரது பிறப்பின் காரணமாக தீண்டத்தகாதவர் என்று கருதக்கூடாது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது; இதுவரை அவ்வாறு கருதப்பட்டவர்கள் பொதுக் கிணறு, பொதுப் பள்ளி, பொதுச் சாலைகள் மற்றும் ஏனைய பொது அமைப்புகளைப் பயன்படுத்த மற்ற இந்துக்களைப் போல் இவர்களும் அதே உரிமை பெறுவர். வெகுவிரைவில் இந்த உரிமை சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படும். அவ்வாறு அங்கீகாரம் பெறவில்லை எனில், நாடாளுமன்றம் இயற்றும் முதல் சட்டங்களில் ஒன்றாக இது இருக்கும்.
“தீண்டத்தகாத வகுப்பினர் என்று அழைக்கப்படுபவர்கள் மீது பழக்க வழக்கத்தால் சுமத்தப்பட்டுள்ள, அவர்கள் ஆலயங்களில் நுழைவதைத் தடுப்பது உள்ளிட்ட எல்லா தகுதியின்மைகளையும் விரைவில் நீக்க, அனைத்து சட்டப்பூர்வமான சமாதான வழிகளில் பாடுபட வேண்டியது, எல்லா இந்து தலைவர்களின் கடமையாகும் என்று மேலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.''
திரு. சப்ரு பின்வருமாறு கூறினார் : “தாம் மேற்கொண்ட லட்சியத்திற்காக டாக்டர் அம்பேத்கர் வீரமாகப் போராடினார்.
நாட்டின் எதிர்கால வாழ்வில் ஒரு நல்ல போராளியாக இருக்கப் போவதாகவும் அவர் வாக்குறுதியளித்தார்.'' – வளரும்
ஆதாரம் : பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(1)
இதுதான் பூனா ஒப்பந்தம்!
1. மாகாண சட்ட சபைகளுக்கு பொது வாக்காளர் தொகுதிகளிலிருந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கான இடங்கள் கீழே குறிப்பிட்டுள்ளபடி ஒதுக்கப்படும்: மதராஸ் 30; பம்பாய் – சிந்து உடன் சேர்த்து 15; பஞ்சாப் 8; பீகார் மற்றும் ஒரிசா 18; மத்திய மாகாணங்கள் 20; அசாம் 7; வங்காளம் 30; அய்க்கிய மாகாணங்கள் 20; மொத்தம் 148. பிரதமரின் முடிவில் அறிவிக்கப்பட்ட மாகாண கவுன்சில்களின் மொத்த இடங்களை இந்தப் புள்ளிவிவரங்கள் அடிப்படையாகக் கொண்டுள்ளன.
2. இந்த இடங்களுக்கான தேர்தல் கூட்டு வாக்காளர் தொகுதிப்படி நடைபெறும். எனினும் கீழ்க்கண்ட செயல்முறைப் படி நடக்கும். ஒரு தொகுதியில், பொது வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் எல்லோரும் வாக்காளர் குழுவாக அமைவர். ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு நான்கு வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை – ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற முறைப்படி வாக்காளர் குழாம் தேர்ந்தெடுக்கும். நான்கு பெயர்களில் யார் யார் முதல் கட்டத் தேர்தலில் மிக அதிக எண்ணிக்கை வாக்குகளைப் பெறுகிறார்களோ, அவர்கள் பொது வாக்காளர் தொகுதிகளில் வேட்பாளர்களாக இருப்பர்.
3. மத்திய சட்டப் பேரவையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவம், மாகாண சட்டப் பேரவைகளில் அவர்களுக்குள்ள பிரதிநிதித்துவம் போலவே பிரிவுகள் மேலே உள்ளபடி, கூட்டுத் தேர்தல் தொகுதிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட இடங்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் முதல் கட்ட தேர்தல் முறைப்படி இருக்கும்.
4. மத்திய சட்டப் பேரவை, அந்த சட்டப் பேரவைக்கு பிரிட்டிஷ் இந்தியாவில் அளிக்கப்பட்ட இடங்களில் 18 சதவிகிதம் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கப்படும்.
5. மத்திய மற்றும் மாகாண சட்டப் பேரவைகளுக்கு வேட்பாளர் பட்டியலில் உள்ளவர்களை தேர்ந்தெடுக்கும் முதல் கட்டத் தேர்தல் முறை, முதல் 10 ஆண்டுகளுக்குப் பின் பரஸ்பர ஒப்பந்தப்படி பிரிவு 6இல் கூறியுள்ளபடி, அது முன்கூட்டியே ரத்து செய்யப்பட்டாலன்றி முடிவுக்கு வரும்.
6. சட்டக் கூறுகள் 1 மற்றும் 4இல் வழிவகை செய்யப்பட்டுள்ளபடி, ஒதுக்கப்பட்ட சமூகத்தினர் மாகாண மற்றும் மத்திய சட்ட சபைகளில் இடஒதுக்கீட்டின் மூலம் பிரதிநிதித்துவம் பெறும் முறை தொடர்புடைய சமூகத்தினரின் இணக்கத்தின் வாயிலாக முடிவு செய்யும் காலம் வரை நீடிக்கும்.
7. ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு மத்திய மற்றும் மாகாணச் சட்டமன்றங்களுக்கு வாக்களிக்கும் உரிமை லோதியன் குழுவின் அறிக்கையின்படி இருக்க வேண்டும்.
8. ஸ்தல அமைப்புகளுக்கான எந்த தேர்தல்களிலும் பங்கு கொள்வதற்கோ, பொதுப் பணிகளில் நியமிக்கப்படுவதற்கோ ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் உறுப்பினர் என்ற அடிப்படையில் எவருக்கும் எந்தத் தகுதியின்மையும் இருக்காது. இவ்வகையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்க எல்லா முயற்சிகளும் செய்யப்படும். பொதுப் பணிகளில் நியமிக்கப்படுவதற்கு அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிகளை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
9. ஒவ்வொரு மாகாணத்திலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு கல்வி பெறும் வசதிகள் பெறுவதற்கு கல்வி மானியத்திலிருந்து போதுமான தொகை ஒதுக்கப்படும்.
3----------------------------------------
பூனா ஒப்பந்தம்
அம்பேத்கர்,காந்தி-சுய மரியாதை,நவீனத்துவம் இணைந்து பயணிக்க வேண்டிய தலித்தியம் !
The flaming feet and other essays என்கிற D. R. Nagaraj அவர்களின் நூலை தூக்கம் தொலைத்து படித்து முடித்தேன். தலித்திய இயக்கத்தை பற்றிய பார்வைகளை மறுவாசிப்பு செய்வதையும்,காந்தி-அம்பேத்கர் உரையாடலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இணைத்து பேசும் காத்திரமான இந்த நூல் வெறும் இருநூற்றி சொச்சம் பக்கங்கள் என்பது உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். அம்பேத்கரும்,காந்தியும் மோதிக்கொண்டார்கள் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு அவசியம் அவர்கள் இருவரின் கருத்தியல்களையும் இணைத்துக்கொண்டு தற்கால சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம்.
காந்தி இந்து மதத்துக்குள் இருந்து கொண்டு அதிலும் குறிப்பாக ஆலயங்களுக்குள் ஒடுக்கப்பட்ட மக்கள் நுழைவதன் மூலம் அவர்களை சாதியத்தின் சமத்துவ மறுப்பில் இருந்து விடுவிக்கலாம் என்று எண்ணினார். எரவாடா சிறையில் உண்ணா நோன்பு இருக்கிற அந்த புள்ளியில் அவரை சந்திக்க ஒரு தலித் இளைஞன் வருகிறான். அவனைக்கொண்டே போராட்டத்தை ஆரஞ்சு சாறு குடித்து முடிக்கலாம் என்று காந்தியின் செயலர் மகாதேவ் தேசாய் எண்ணுகிறார். ஆனால்,காந்தியை சந்தித்துவிட்டு சென்ற அந்த இளைஞன் மீண்டும் அவரை சந்திக்க வரவே இல்லை. காந்திக்கு தங்களின் நிலையை மாற்ற வேண்டும் என்கிற விருப்பம் இருந்தாலும் அங்கே தான் ஒரு புனித பரிகாசத்துக்கு உள்ளாவதை அவன் உணர்ந்தான். அங்கேயே தலித் இயக்கத்தின் புரட்சிக்குரல் எழுந்துவிடுகிறது என்கிறார் ஆசிரியர்.
கோயிலில் இருக்கும் ஆன்மிகம் மற்றும் அது தரும் பெருமிதம் அதனோடு இணைந்த கலாசார வேர்கள் ஆகியன ஒடுக்கப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழையும் பொழுது மாற்றத்தை கொண்டு வரும் என்று காந்தி நினைத்தார். மேலும் இந்த சாதிய முறை கிராம பொருளாதரத்தை காக்கிறது,அது தேவை. அதில் இருக்கிற செயல்பாட்டு நெறிமுறை சிக்கலுக்காக அதை முற்றாக நிராகரிக்க கூடாது என்கிற பார்வை அவருக்கு ஆரம்பத்தில் இருந்தது. அண்ணல் அம்பேத்கர் எந்த அமைப்பு அவர்களை ஒடுக்குகிறதோ அதனுள்ளே இருந்தே எப்படி வழிபடுவது என்கிற கேள்வியை எழுப்பினார். சுய புனிதப்படுத்துதல் என்பதை காந்தி குறிக்கலாம்,ஆனால்,சுய மரியாதையை இழந்து ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ முடியாது என்று காந்தியின் பார்வையில் இருந்த குறைபாட்டை சுட்டிக்காட்டினார். மேலும்,சாதிய அமைப்பை கிளர்ச்சி செய்து தகர்ப்பதே ஒட்டுமொத்த விடுதலைக்கு வழி என்று அவர் எண்ணினார்.
தெற்கில் பிரமாணர் அல்லாதோரின் அரசியல் முகமான நீதிக்கட்சி 1944 தேர்தலில் தோற்றதும் அம்பேத்கர் இப்படி பதிகிறார்,”எந்த பிரமாணியத்தை எதிர்ப்பதாக அவர்கள் சொல்லிக்கொண்டார்களோ அவர்களை போலவே நாமம் அணிந்தே இவர்கள் இரண்டாவது பிராமணர்கள் போல நடந்து கொண்டார்கள். மேலும் அரசாங்க அமைப்புகளில் வேலை பெற்றால் மட்டும் போதும் என்று அவர்கள் பத்து சதவிகித மக்களுக்கு மட்டும் இயங்கி கிராமப்புறத்தில் இருந்த மிச்ச ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை கணக்கில் கொள்ளாமல் போய் இயக்கத்தை நீர்க்க விட்டுவிட்டார்கள்.
காந்தியின் ஹரிஜன் இயக்கத்தில் காந்திக்கு மனதார ஒப்புமை இருந்ததாக கொண்டாலும் அவரை பின்பற்றியவர்கள் அதற்கு தயாராக இல்லையென்பதே உண்மையாக இருந்தது. அவருக்கும்,அவரின் தொண்டர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களுக்கு மிகப்பெரிய இடைவெளி இந்த தலித்கள் பற்றிய போராட்டத்தில் இருந்தது. பூனா ஒப்பந்தத்தில் காந்தி தன்னுடைய விடாப்பிடியான போக்கின் மூலம் வென்றது போல இருந்தாலும் அது பலமற்ற அடித்தளத்தில் இருக்கிறது என்பதை அவர் உணர்ந்தே இருந்தார். அரசின்மைவாதியான காந்தி பூனா ஒப்பந்தத்தின் மூலம் அரசின் மைய நீரோட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். மேற்கின் தத்துவங்களை உள்வாங்கிய அண்ணலோ இந்த இந்துக்களோடு இணைந்து இயங்கவே முடியாது என்று தனித்த பிரிவாக எழ வேண்டும் என்று விரும்பினார்
நவீனத்துவம் அதிலும் மேற்கின் தொழில்மயம் மனிதத்தன்மை அற்று இருக்கிறது மற்றும் அதில் அவமானங்கள் மற்றும் அவலங்கள் அதிகம் என்ற காந்தி அதே பண்போடு கிராமப்புறங்கள் ஒடுக்கப்பட்ட மக்களை நடத்தியதை கவனிக்க மறந்தார். அதை அம்பேத்கர் அவருக்கு உணர்த்தினார். காந்தியின் கிராம மக்களின் ஆன்மிகம் சார்ந்த பிடிப்பு மற்றும் அவர்களின் வேரோடு கூடிய இணக்கம் ஆகியவற்றை அம்பேத்கர் உள்வாங்கிக்கொண்டார்.
காந்தி தீண்டாமை ஒழிப்பில் கவனம் செலுத்தினார். அது அமைப்புக்குள் இருந்து கொண்டே மனசாட்சியை தட்டி எழுப்பி நிகழ வேண்டிய ஒன்று என்று அவர் நம்பினார். தீண்டாமை சிக்கல் இந்து மதத்துக்கு உரியது அதில் மற்றவர்கள் தலையிடக்கூடாது என்கிற பார்வை அவருக்கு இருந்தது. அம்பேத்கரோ எல்லா மத மக்களும் தங்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தரலாம் என்று முழக்கமிட்டார். காந்தியின் இந்து மதத்துக்குள் இருந்தே மாற்றங்களை பெறுவது என்பதில் தாங்கள் குகனைப்போல அடி பணிகிற ஒருவராகத்தான் பெரும்பாலும் கொள்ளப்படுவோம்,தீரா பக்தி மற்றும் சேவை என்று சொல்லி மேலெழும்பும் உரிமைகள் மறுக்கப்படும் தாங்கள் ராமனாக மாறமுடியாது என்கிற காந்தியின் மாதிரியின் போதாமையில் அண்ணலுக்கு புரிதல் இருந்தது.
சுய சுத்திகரிப்பில் ஈடுபடும் சாதி இந்துக்களின் சடங்காக தாங்கள் மாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்து கற்பி,ஒன்று சேர்,கிளர்ச்சி செய் என்று சுய மரியாதையை ஒடுக்கப்பட்ட மக்கள் கொண்டிருக்க வேண்டும் என்று அழுத்தி அம்பேத்கர் இயங்கினார். காந்தி தோல் வேலைகளில் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்கள் இயல்பட வேண்டும்,அவர்களின் மரபார்ந்த தொழில்நுட்பங்கள் காலனியாதிக்கத்தில் காணமல் போயின என்றார். அவரின் வாதத்தில் ஒரு புறம் நியாயம் இருந்தாலும்,பல்வேறு தொழில்கள் அவர்களை இழிவுபடுத்தும் வேலைகளை செய்தமையால் அவற்றை விடுக்க வேண்டும் என்கிற அம்பேத்கரின் வாதத்தில் ஆழமிருந்தது. காந்தியின் எல்லாரையும் இணைத்துக்கொள்ளும் மதம்,அம்பேத்கரின் பொருளாதாரம் ஆகிய இரண்டும் இருவரின் உரையாடலில் இடம் மாறிக்கொண்டன.
முழுக்க அமைப்பை உடைத்துவிட்டு போவது என்பது ஒரு புறமாக மட்டுமே இயங்குவதாக ஒற்றைப்படையாக போய் விடுகிறது உள்ளிருந்தபடியே யார் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறார்களோ அவர்களிடமும் மாற்றங்களை கொண்டு வர பாடுபட வேண்டும் என்கிற காந்திய சிந்தனையை தற்கால தலித் இயக்கங்கள் சில உள்வாங்கி இருக்கின்றன. கர்நாடக தலித் சங்கர்ஷ் சமிதி ஆதிக்க சாதியினரின் வீடுகளின் முன் குவளையில் தண்ணீர் கொடுத்து குடிக்க வைக்கும் போராட்டத்தை நிகழ்த்தினார்கள் என்பதை இணைத்து ஆசிரியர் பேசுகிறார். இப்படிப்பட்ட நகர்வுகள் அவசியம் என்கிறார்.
சோசியலிசம்,ஜனநாயகம்,நீதி ஆகிய மேற்கின் கருத்தாக்கங்களை உள்வாங்கி வந்த அம்பேத்கர் அங்கே இருந்த சாதிய அமைப்புமுறை ஆதிக்க சாதியினர் சொல்வதே வேதம்,உங்களுக்கு உரிமைகள் என்று எதுவும் கிடையாது,நீங்கள் இந்த அமைப்புக்குள்ளேயே உழல வேண்டும் என்கிற பார்வையை தந்திருந்தது. அவற்றை இதிலிருந்து முழுமையாக எதிர்ப்பதன் மூலம் மட்டுமே மீள முடியும் என்று அண்ணல் எண்ணினார். ஒரு கிராமப்புற சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவின் ஒரு நபர் ஏதேனும் ஒரு தவறு செய்தால் ஒட்டுமொத்த சமூகத்தையும் தண்டிக்கும் ஆதிக்க சாதியினர் அதே போக்கை தங்கள் சமூகத்து நபர் தவறு செய்கிற பொழுது கைக்கொள்ள மறுக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் மேலெழும்புவதை பல்வேறு வகைகளில் அவர்கள் மறுக்கிறார்கள்,எதிர்க்கிறார்கள். பண்டைய பழமொழிகள் ஜாதிய வெறுப்பை பல்வேறு இடங்களில் பிரதிபலித்துக்கொண்டே இருக்கிறது. மைசூரில் ஒரு பஞ்சம் ஏற்பட்ட பொழுது பிராமணர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து இயங்குவதை விட இறப்பதே மேல் என்று அழுத்தமாக இருந்ததை பதிகிறார் ஆசிரியர். இப்படிப்பட்ட இறுக்கமான சூழல்களை கலப்பு திருமணங்களின் மூலம் தற்கால தலித் இயக்கங்கள் எதிர்கொள்வது அவசியமாகிறது. அம்பேத்கரின் அடிப்படைகளான சுய மரியாதையை ஏந்திக்கொண்டு காந்தியின் எல்லாரையும் இணைத்துக்கொண்டு இயங்குதல் என்கிற உரமும் நல்ல வளமான சமூகத்துக்கு அவசியமாகிறது.
நீர்,நிலம்,காடு ஆகியவை சார்ந்த வடிவமைப்பு உரிமைகள்,சமூக இடங்களில் ஒன்றாக புழங்க உரிமை மற்றும் சமூக விழாக்களில் இணைந்து பங்குபெறும் உரிமைகள் என்று தலித்துகளுக்கான உரிமைகள் மூன்று வகையாக பகுக்கலாம். இதில் மூன்றாவது உரிமையை மறுப்பதிலும்,வன்முறையை கட்டவிழ்ப்பதிலும் எண்ணற்ற ஆதிக்க சாதியினர் ஈடுபடுகிறார்கள். இப்படி எண்ணற்ற சிக்கல்கள் சாதி அமைப்பால் ஏற்படுவது கொண்டிருந்த சமூகத்தில் தற்போது கூடுதலாக் இன்னுமொரு ஆபத்து வந்துள்ளதை கவனிக்க அறிவு ஜீவிகள் மறுக்கிறார்கள். அது நவீனத்துவம். அதை கொண்டு ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. சூழலியலை காலி செய்கிற பொழுது ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரை எதிர்க்க வைத்து அதிகார மையங்கள் காரியம் சாதிப்பதை செய்கின்றன. அறிவியல்,தொழில்நுட்பம்,முதலீட்டு அமைப்புகள் நவீனத்துவம் என்கிற பெயரில் எண்ணற்ற ஒடுக்கப்பட்ட மக்கள்.பழங்குடியினரை அழிக்கிறது. அவர்களின் நிலத்தை விட்டும்,கலாசார பிணைப்பை விட்டும் காணடிக்கிறது. உள்ளூர் மட்டத்தில் வெவ்வேறு முகங்கள் கொண்டு இயங்கும் முதலாளித்துவத்தின் கோரங்களை விமர்சிக்க அறிவுஜீவிகள் முன்வர வேண்டும். அது ஒடுக்கப்பட்ட மக்களை ஜாதிய படிநிலையில் இருந்து கலாசாரம் மற்றும் அடையாளம் அற்றவர்களாக ஆக்கியிருக்கிறது என்று மட்டுமே சொல்லி இழப்பின் பெருவலியை கடக்க முயல்கிறோம். மிக நெடிய செறிந்த கலாசாரம் கொண்ட பவுத்தத்தை சாதி இந்து அமைப்புக்கு மாற்றாக அண்ணல் கைக்கொண்டதை கவனிக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் பல்வேறு தொழில்நுட்பங்களில்,கலைத்தொழில்களில் சிறந்து விளங்கினர். அவற்றை மீட்பதும் அவசியமே. சாதிய அமைப்பை காலி செய்கிறது என்று நாம் நம்புகிற நவீனத்துவமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநியாயங்களை செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.
கல்வி,அறிவியல்,பொருளாதாரம் என்று ஆதிக்க சாதியினர் நவீனத்துவதை ஒடுக்கப்பட்ட மக்களை பின்னுக்கு தள்ள பயன்படுத்துகிற போக்கும் நிலவுகிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியாக மட்டுமே பிந்தங்கியிருந்தார்கள் என்பதை என்பதை மறைத்து அவர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒரே மாதிரியான சிக்கல் கொண்டவர்கள் என்று பேசுவது வலி நிறைந்த வரலாற்றை உண்மையை மறைக்கும் போக்கே. ஆன்மீக பிரதிநித்துவங்கள் முழுக்க தவறானவை என்று பேசாமல் அவற்றின் ஒடுக்கப்பட்ட மக்களின் கலாசாரத்தோடு இணைதல்,அழித்தல் மற்றும் தேர்ந்தெடுத்த அமைதியை கூர்ந்து பதிவு செய்ய வேண்டும்.
தொழில்நுட்பம் செய்யும் பல்வேறு கொலைகளுக்கு,நவீனத்துவம் மக்களை அழிக்கும் அவலங்களுக்கு எதிராக,மண்ணுக்காக,சூழலியலுக்காக,அணைகள் கட்டவும், வளர்ச்சியை உருவாக்கவும்,தனிமங்கள் எடுக்கவும் மண்ணில் இருந்தும்,காடுகளில் இருந்தும் விரட்டப்படுவதில் பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களே என்பதை உணர்ந்து இதற்கு எதிராகவும் குரலெழுப்ப தவறுவது தகாது என்கிறது நூல். காந்தியின் இந்த நவீனத்துவம் மீதான விமர்சனத்தோடு அண்ணலின் அடிபணியமாட்டேன் என்கிற ஆதாரமும் சேருகிற பொழுதே மாற்றங்கள் நிஜமாகும்
4------
Anderson
பூனா ஒப்பந்தம் 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் , 24
March 18, 2017
பூனா ஒப்பந்தம் என்பது 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் , 24 அன்று பூனாவில் உள்ள எரவாடா சிறையில் அம்பேத்கருக்கும் காந்தி அடிகளுக்கும் இடையே ஏற்பட்ட ஓர் உடன்படிக்கை ஆகும்.
வரலாறு
தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தேர்தலில் தனித் தொகுதிகளை அளிக்க பிரிட்டிசு அரசு முன் வந்தபோது இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்ட அம்பேத்கர் அந்தத் திட்டத்தை ஆதரித்தார். ஆனால் காந்தி அதைக் கடுமையாக எதிர்த்தார். இந்துக்கள் தீண்டத் தகாதவர்கள் என்றும் சாதி இந்துக்கள் என்றும் பிளவு படுவதைத் தாம் விரும்பவில்லை என்று கூறினார். எரவாடா சிறையில் இருந்த காந்தி அடிகள் 18-9-1932 இல் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார். காந்தியடிகள் உடல் நிலை மோசமானதால் அந்த உண்ணாவிரதத்தை நிறுத்திக் காந்தியின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தில் அம்பேத்கரும் பிற இந்து தலைவர்களும் பூனாவில் கூடிப் பேசினர். இந்தியாவின் மிகச் சிறந்த தலைவராக விளங்கிய காந்தி அடிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கடமை ஒரு புறம்; தீண்டப் படாத சமூகத்தின் நலனைக் காக்க வேண்டிய பொறுப்பு மறுபுறம். எனவே இருதலைக் கொள்ளி நிலைமைக்கு அம்பேத்கர் ஆளானார்.
பூனா ஒப்பந்தத்தின் படி மாகாணச் சட்டசவைகளில் 148 இடங்களைத் தீண்டத் தகாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிப்பது என்று முடிவு ஆனது. பிரிட்டிசு இந்தியாவில் மத்தியச் சட்ட சவையில் இந்துக்களுக்காக உள்ள மொத்த இடங்களில் பத்து விழுக்காட்டைத் தீண்டத் தகாதவர்களுக்கு ஒதுக்கீடு செய்வது என்றும் தீர்மானித்தார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக அம்பேத்கரும், சாதி இந்துக்களின் சார்பாகப் பண்டித மதன் மோகன் மாளவியாவும் கையெழுத்து இட்டார்கள். இராசகோபாலாச்சாரி இராசேந்திரப் பிரசாது, எம்.சி.இராஜா போன்ற தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர். இதனைத் தொடர்ந்து காந்தி உண்ணா நோன்பு போராட்டத்தைக் கைவிட்டார்.
5-----
↰ மின்தமிழ்
பூனா ஒப்பந்தம்
நேற்று ஒரு அம்பேத்கரிய பயிற்ச்சி வகுப்பை எடுக்க சென்றிருந்தேன் . அங்கே பலர் பூனா ஒப்பந்தம் என்றால் என்ன அக்கா என்று பலர் ஆர்வமாக கேட்டனர்..!
பூனா ஒப்பந்தம் என்றால் என்ன..?
1932 ஆம் ஆண்டு, பிரிட்டிஷாரின் ஆட்சியில் ஷெட்யூல்டு மக்களுக்கு, பாபாசாகேப் அம்பேத்கரின் அயராத முயற்ச்சியால் தனிவாக்காளர் தொகுதி, இரட்டை வாக்குரிமை உள்ளடக்கிய communal Award ஐ, பிரிட்டீஷ் அரசு உத்திரவாதம் அளித்தது..! இந்த அறிவிப்பை எதிர்த்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் செம்டம்பர் 20ஆம் தேதி முதல் காந்தி எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் என அறிவித்து உண்ணா நோன்பிருந்தார்..!
தீண்டத்தகாத மக்கள் பசுவைப் போன்றவர்கள் , அவர்களுக்கு அரசியல் அதிகாரம் என்னும் ஆசையைக் காட்டுவது பாவம் என காந்தி அதற்கு விளக்கம் என்ற பெயரில் சாதிய வன்மத்தை வெளிப்படுத்தினார்..! அவரைத்தான் இந்நாடு மகாத்மா என கொண்டாடுகிறது..!
இதற்கிடையில் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பல அழுத்தங்கள் அன்று வந்தது..! காந்தியை விட என்மக்களின் அரசியல் அதிகாரம்தான் எனக்கு முக்கியமானது என பாபாசாகேப் அம்பேத்கர் கர்ஜித்தார்..! காங்கிரசார், பெண்கள் , காந்திய பைத்தியங்கள் பலர் பாபாசாகேப் வீடுமுன்பு கூடி அண்ணலுக்கு எதிரான முழக்கமிட்டனர்..! தேச துரோகி என தூற்றினர்..! இதற்கு எதற்க்குமே அசராமல், ஏளனங்களை சுமந்துக்கொண்டு தனது நியாயமான கொள்கையில் உறுதியுடன் பயணித்த பாபாசாகேப் அம்பேத்கர் எரவாட சிறைக்கு சென்று தங்களின் நியாயத்தை எடுத்துக்கூறி , உண்ணாநோன்பை கைவிடும்படு காந்தியிடம் கேட்டுக்கொண்டார், அதற்கு காந்தி என்ற நயவஞ்சகம் மறுத்துவிட்டது..!
அப்போது காந்தியின் பக்தர்கள் பலர், காங்கிரசார் என பலர் இந்தியாவின் பல இடங்களில் ஏதுமறியா அப்பாவி பட்டியல் மக்களின் மீது தாக்குதல் நடத்தினர்..! காந்தியின் உயிர்தான் எங்களுக்கு மிக்கியம் உங்களுக்கு அரசியல் அதிகாரம் ஒரு கேடா..? சாவுங்கள் என கூறி இத்தாக்குதல்கள் தொடங்கிற்று....காந்தியின் உண்ணாநோன்பு என்ற சண்டித்தனத்திற்கு அஞ்சாமல் இருந்த பாபாசாகேப் அம்பேத்கர் , இந்தியாவின் பல இடங்களில் இதனால் தன் மக்கள் தாக்கப்படுவதையும், கொல்லப்படுவதையும் நினைத்து கண் கலங்கினார்...!
பட்டியல் மக்கள் அன்று தாக்கப்படுவதை இருட்டடிப்பு செய்த பத்திரிக்கைகள் , வானொலிகள், எல்லாம் காந்தி கவலைக் கிடமாக உள்ளார்..! உண்ணா நோன்பால் அவரது உடல்நிலை கடுமையாக மோசமடைந்துள்ளது என எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றி கலவரத்திற்கு கூர் தீட்டியது...ஒருவேலை காந்திக்கு ஏதேனும் நேர்ந்தால் தன் மக்கள் பல இடங்களில் மேலும் தாக்கப்படுத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்படுவார்கள் என்று ஒரு தாயைப்போல தன்மக்களை நினைத்து கலங்கிய பாபாசாகேப் தனது பூனா ஒப்பந்த கோரிக்கையை வாபஸ் பெற்று காத்திக்கு உயிர் பிச்சைக் கொடுத்து, இம்மக்களை காத்தார்..!
அன்று இந்துக்களின் தூண்டுதலின் பேரில் இராமராஜ்ஜியம் அமைத்து வருணாசிரம படிநிலையை பாதுகாக்க பயன்படுத்தப்பட்ட காந்தி மூலம் , நாம் நமக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் அதிகாரத்தை இழந்து நிற்கிறோம்..!
இப்ப சொல்லுங்க உங்களின் மாகாத்மா யாரென்று..???
இரட்டை வாக்குரிமையின் நன்மைகள் குறித்து எனது ஓய்வின்போது விரிவாக எழுதுகிறேன்.ஜெய்பீம்.
தோழமையுடன்.
மு.சவிதா.
--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
No comments:
Post a Comment